ஏழுமலையான் கோயிலுக்கு 460 பக்தர்கள் நடைபயணம் மஞ்சள் ஆடை அணிந்து காப்பு கட்டி புறப்பட்டனர் தண்டராம்பட்டில் இருந்து

தண்டராம்பட்டு, மார்ச் 3: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தண்டராம்பட்டில் இருந்து 460 பக்தர்கள் நடை பயணம் மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மேல்பாச்சார் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் நடைபயணம் மேற்கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் கடந்த மாதம் 21ம் தேதி கொடி ஏற்றி மஞ்சள் ஆடை அணிந்து காப்பு கட்டி பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை தண்டராம்பட்டில் உள்ள சீனிவாச பெருமாள், தேவி, பூதேவி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து திருப்பதிக்கு 460 பக்தர்கள் 9ம் ஆண்டு பாதையாத்திரையாக புறப்பட்டனர். திருப்பதி திருமலை வரையிலும் நடைபயணம் மேற்கொண்டு கோயிலை அடைந்ததும் ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளனர்.

The post ஏழுமலையான் கோயிலுக்கு 460 பக்தர்கள் நடைபயணம் மஞ்சள் ஆடை அணிந்து காப்பு கட்டி புறப்பட்டனர் தண்டராம்பட்டில் இருந்து appeared first on Dinakaran.

Related Stories: