வீடுகளில் சோலார் பேனல் திட்டம்: அஞ்சலகத்தில் பதிவு செய்யலாம்

சென்னை: சென்னை பொது அஞ்சலக முதன்மை அலுவலர் ஸ்வாதி மதுரிமா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து, மக்களே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு மாதம்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் இணைவோர் தங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ₹15000, ₹18000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் உதவும்.

இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்கள் சென்னை பொது அஞ்சலகத்தில் தபால்காரரையோ அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு நேரடியாகவோ வந்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக சிறப்பு முகாமும் நடக்கிறது.

The post வீடுகளில் சோலார் பேனல் திட்டம்: அஞ்சலகத்தில் பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Related Stories: