ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னியின் உடல் அடக்கம்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினின் சொத்துகள், ஆடம்பர வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தவர் அலெக்ஸ் நாவல்னி(47). அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நாவல்னி, பாதுகாப்புகள் நிறைந்த ஆர்டிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த நாவல்னி கடந்த 16ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடுமையான கெடுபிடிகளுக்கு இடையே அலெக்சி நாவல்னியின் உடல் மாஸ்கோவின் தென்கிழக்கு மேரினோ மாவட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப் பட்டது.

The post ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னியின் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: