வங்க தேச வணிக வளாகத்தில் தீ விபத்து: 45 பேர் பலி

டாக்கா: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் 7 மாடி கட்டிடத்தில் வணிக வளாகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஏராளமான ஓட்டல்கள் மற்றும் பல்வேறு கடைகள் அமைந்துள்ளது. எப்போதும் இந்த வணிக வளாகம் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்நிலையில் இங்குள்ள பிரபல கச்சி பாய் என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மளமளவென அடுத்தடுத்து கடைகளுக்கும் பரவியது. இந்த தளத்துக்கு மேலே இருந்த துணிக்கடையும் தீயில் சிக்கியது. இது குறித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயைக்கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் 45 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post வங்க தேச வணிக வளாகத்தில் தீ விபத்து: 45 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: