திருவேற்காடு அரசு பள்ளியில் 48 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே சுந்தரஅரசு பள்ளியில் நேற்று முதல்கட்டமாக 48 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். இதில் திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்இகே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு திருவேற்காடு அருகே சுந்தரசோழபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முதல்கட்டமாக 48 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமை தாங்கி, முதல்கட்டமாக அப்பள்ளியில் படிக்கும் 48 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்இகே.மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் சாந்தி ராஜா, தெய்வசிகாமணி, ருக்மணி பவுல், ஆஷா ஆசீர்வாதம், மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பவுல், வட்ட செயலாளர் குமார், கஜா, பொருளாளர் சரவணன், நிர்வாகிகள் ஆசைத்தம்பி, ராஜு, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு அரசு பள்ளியில் 48 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: