கழனிவாசல் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சிறப்பு முகாம்

 

பேராவூரணி, மார்ச் 1: கிராமங்களை தேடிச்சென்று வாரம் ஒரு முறை புதிய வங்கிக் கணக்குகள் துவங்கவும், நிலுவையில் உள்ள கடன்களை வசூல் செய்யும் வகையில் பல்நோக்கு முகாம்களை நடத்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல அலுவலகம் உத்தரவின் படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பேராவூரணி அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு துவங்கவும், நிலுவையில் உள்ள கடன்களை வசூல் செய்யவும், புதிய கடன் வழங்கவும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் பதிய கணக்கு துவங்கவும், கடன் பெறவும், பொதுமக்களிடம் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமிற்கு வங்கி கிளை மேலாளர் ஆஷிஷ் பானர்ஜி தலைமை வகித்தார். வங்கி அலுவலர் (பயிற்சி) வினோதினி, அலுவலக உதவியாளர் சிவகுமார், கழனிவாசல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், கிராம பிரமுகர்கள் மார்க்கண்டேயன், பாண்டியன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கழனிவாசல் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: