தேசிய அறிவியல் தின கண்காட்சி

 

பந்தலூர், மார்ச் 1: பந்தலூர் அருகே பாக்கனா ஐஎம்எஸ் உயர்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் வரவேற்றார்.

ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், பள்ளி தாளாளர் உனைஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் கண்காட்சியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்றுனர் பால்துரை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சார வாரிய கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் சதீஷ்குமார், பந்தலூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உரிமைக்குரல் அமைப்பு மாநில தலைவர் சரவணன் ஆகியோர் சிறந்த கண்காட்சி அமைத்த ராணா மேகரின், ஆதில், முகமது ஷையான், அஞ்சியக் குழுவினர், ஹர்டியா குழுவினர், முகிமினா குழுவினர், முகமது நிகால் குழுவினர் உட்பட 12 குழு மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்ததனர்.

கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ரோபோ சர்வர், இன்குபேட்டர், கண் செயல்பாடுகள், கிட்னி செயல்பாடுகள், வாட்டர் ஏடிஎம் வாட்டர் ஹார்வெஸ்டிங், சந்திரயான் ஏவுகணை, எரிமலை அமைப்புகள், பேட்டரி வாகனங்கள், காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு முறைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொருட்களை செய்து கண்காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர்.

The post தேசிய அறிவியல் தின கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: