குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் வேட்டங்குடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும்

கொள்ளிடம், மார்ச் 1: கொள்ளிடம் அருகே வேட்டங்குடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். பிடிஓ உமாசங்கர் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சரவணகுமார் அறிக்கை வாசித்தார். வேட்டங்குடி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். காட்டூர் ஊராட்சி காமராஜ் தெருவில் சிமென்ட் சாலை மற்றும் மயான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரப்பள்ளி ஊராட்சி பவுசுப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நாணல்படுகை, பில்படுகை கிராமத்தில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்க வேண்டும். பழையபாளையம், கொடைக்காரமூலை, பாலக்காடு தெருக்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். ஆர்ப்பாக்கம் மயான சாலையை மேம்படுத்த வேண்டும் என்று அந்தந்த பகுதி உறுப்பினர்கள் பேசினர். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் பதிலளித்து பேசுகையில், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் மிக விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் வேட்டங்குடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: