கயத்தாறு, மார்ச் 1: கயத்தாறு யூனியன் சன்னதுபுதுக்குடி கீழூரில் குடிநீர் தொட்டி அமைத்து, அங்கன்வாடி பள்ளியை பழுதுபார்க்கவும், தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் கலையரங்கம் அமைக்கவும் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ₹11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று நடந்த இதன் தொடக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு திமுக கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலைவர் வள்ளி செந்தில்வேல், ஓலைகுளம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, ராஜாபுதுக்குடி பால்ராஜ், கிளை செயலாளர்கள் தலையால்நடந்தான்குளம் குமரேசன், முருகேஷ், ராஜாபுதுக்குடி சதீஷ், எட்டுராஜ் மற்றும் ஊர் நாட்டாண்மைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கயத்தாறு பகுதியில் ₹11 லட்சத்தில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.