மார்த்தாண்டம், டிச.18: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்தவர் சைஜூ (40). கார் டிரைவர். இவருக்கும் பாறசாலை இஞ்சிவிளையை சேர்ந்த சிந்து (41) என்பவருக்கும் திருமணமாகி பாறசாலை பகுதியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி பிரிந்து சென்றதால் சைஜூ மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சைஜூ களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கு அவர் விட்டத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
