நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை உடனே திறக்க வேண்டும் திக வலியுறுத்தல்

நாகர்கோவில், டிச.18: திக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு குலசேகரன்புதூர் லட்சுமிபுரம் சமத்துவபுரம் அருகே ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. புதிய கட்டடம் புதர்மண்டி காணப்படுகிறது. பழைய அலுவலகம் வாடகை கட்டடத்தில் மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே இயங்குகிறது. வாடகை கட்டடத்தில் இயங்குவதன் மூலம் அரசுக்கு பல லட்சங்கள் இழப்பு வருகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தை உடனே திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Related Stories: