ஹனிமூனுக்கு அழைப்பு விடுத்த நடிகருக்கு பளார் விட்ட பாடகி: பாகிஸ்தான் டிவி லைவில் அதிர்ச்சி

லாகூர்: பிரபல பாகிஸ்தானிய பாடகி ஷாஜியா மன்சூர், இந்த வாரம் பாகிஸ்தான் செய்தி சேனலான பப்ளிக் நியூஸில் நடந்த ‘பப்ளிக் டிமாண்ட்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் நகைச்சுவை நடிகரான ஷெர்ரி நன்ஹா உரையாடினார்.அப்போது ஷாஜியாவிடம் ஷெர்ரி, ‘உங்களை நான் திருமணம் செய்து கொண்டால், தேனிலவுக்கு மான்டே கார்லோ தீவுக்கு அழைத்துச் செல்வேன். அப்படி என்றால், நீங்கள் எந்த வகுப்பில் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?’ என்று கேட்டார்.

ஆவேசமடைந்த ஷாஜியா, அருகில் அமர்ந்திருந்த ஷெர்ரியின் தலையில் அடித்தார். தொடர்ந்து அவரை பளார் என்று அறைந்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘ஏற்கனவே இதுபோன்ற கேள்விகளை கேட்கும் போது அமைதியாக கடந்து சென்றேன். மீண்டும் இதுபோன்ற கேள்விகளை கேட்பது சரியா? பெண்களுடன் இப்படி தான் பேசுவீர்களா?’ என்று கேட்டார். மேற்கண்ட சம்பவமானது அந்த செய்தி சேனலில் நேரடி ஒளிபரப்பில் காட்டப்பட்டது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

The post ஹனிமூனுக்கு அழைப்பு விடுத்த நடிகருக்கு பளார் விட்ட பாடகி: பாகிஸ்தான் டிவி லைவில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: