விளம்பரத்திற்கு பயன்படும் வானுயர்ந்த ‘புர்ஜ் கலீஃபா: விளம்பரம் வெளியிட ரூ.80 லட்சம் குறைந்தபட்ச கட்டணம்

துபாய்: ஒரு பொருள் உலகம் முழுவதும் பிரபலமடைய வேண்டுமானால் அதனை துபாயில் உள்ள ‘புர்ஜ் கலீஃபாவின் மீது விளம்பரப்படுத்துவது தற்போது ட்ரென்ட் ஆகிவருகிறது. துபாயில் உள்ள உலகளாவிய கட்டிடமாகிய புர்ஜ் கலீஃபா 163 தளங்களை கொண்டது. திரைப்பட ட்ரைலர்கள் மற்றும் விளம்பரங்களை கட்டணத்தை அடிப்படையில் புர்ஜ் கலீஃபா நிர்வாகம் அதில் திரையிட அனுமதிக்கிறது.

கமல்ஹசனின் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களும், தமிழ்நாடு அரசின் செம்மொழி, கீழடி உள்ளிட்ட கட்சி படங்களும் இதில் திரையிடபட்டுள்ளன. மிக எளிதில் ‘புர்ஜ் கலீஃபாவில் விளம்பரப்படுத்திவிட முடியாது. அதற்கான செலவுகள் மிக அதிகம் புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் உள்ளும் மேற்புறமும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தலாம்.

கட்டடத்தின் உள்ளே விளம்பரம் செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு கட்டணமாகும். இந்திய மதிப்பீட்டில் குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் முதல் ரூ.8 கோடி வரை இதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் புர்ஜ் கலீஃபாவில் செலவு குறைந்த விற்பனை முறை என்றால் ப்ரோஜெக்சன் மாபிங் தான் இது கட்டடத்தின் வெளிப்புறத்தில் ப்ரொஜெக்டர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்யும் முறை அதற்கான ஆரம்ப கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 லட்சம் ஆகும்.

விளம்பர காட்சிகள் சிக்கலான தன்மை மற்றும் நிலத்தின் அடிப்படையில் தன்மை மாறுபடும் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வது செலவு மிகுந்த ஒன்று என்றாலும் உலகளாவிய பார்வையாளர்களை அடைவதால் பயனுள்ள முதலீடாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாக தங்கள் தயாரிப்புகளை புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் திரையிட்டு பிரபல படுத்த சர்வதேச நிறுவனங்கள் விரும்புகின்றனர்.

The post விளம்பரத்திற்கு பயன்படும் வானுயர்ந்த ‘புர்ஜ் கலீஃபா: விளம்பரம் வெளியிட ரூ.80 லட்சம் குறைந்தபட்ச கட்டணம் appeared first on Dinakaran.

Related Stories: