பெரம்பலூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்

பெரம்பலூர்,பிப்.29: பெரம்பலூரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக் கம் சார்பாக,சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலக த்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் சார்பாக, தமிழக அளவில் பணிபுரிந்து வரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக அறிவித்த தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்றக் கோரி, கடந்த 19ஆம் தேதி முதல் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள தமிழ் நாடு பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்ட கலெக் டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு பெரம்பலூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,ஆசிரியர்கள் மீதான கைது நடவடிக்கை யைக் கைவிடக் கோரியும் கடந்த 26ம் தேதிமுதல் ஒவ்வொரு நாளும் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 3வது நாளான (28ஆம்தேதி) நேற்றும் பகல் 11.30 மணிமுதல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தார்.முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச்செயலாளர் நல்ல தம்பி, மாவட்ட துணை செய லாளர் ராஜா, துணைத் தலைவர் செல்வகுமார், மாவட்டமகளிரணிதலைவி புவனேஸ்வரி உள்ளிட்ட 16-பெண்கள் உள்பட 25பேரை பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.

The post பெரம்பலூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: