பெண் மாவட்ட செயலாளர் என்னை அசிங்கப்படுத்துகிறார்: நொந்து நூடூல்ஸான அதிமுக எம்எல்ஏ

திருவண்ணாமலை அதிமுக மத்திய மாவட்டம் ஆரணி தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி அடுத்த மேதப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக அமைப்பு செயலாளரும், எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் திடீரென கூட்டத்தில் எழுந்து மைக்கை பிடித்து பேசத்தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘ஒரு முறை அமைச்சராகவும் தற்போது எம்எல்ஏ ஆகவும் இருந்து வருகிறேன். கடந்த 30 ஆண்டு காலமாக கட்சி பணியாற்றி வருகிறேன். ஆனால், தற்போது மத்திய மாவட்ட செயலாளராக உள்ள ஜெயசுதா, அவர் என்னை மதிப்பது இல்லை. கட்சி பணிகளுக்கு முறையாக அழைப்பதும் இல்லை. கட்சிப் பணிகளை செய்ய விடாமல் தடுக்கிறார்.

கட்சி பேனர்கள், நோட்டீஸ்கள், போஸ்டர்களிலும், பத்திரிகை செய்திகளிலும் எனது பெயரை வராமல் இருக்கவும், சில நிகழ்ச்சியில் பெயர் போடாமலும் அசிங்கப்படுத்தி வருகிறார்கள்’ என ஆவேசத்துடன் பேசிவிட்டு ெபாதுக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். உடனே அவருடன் இருந்த நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் சேர்ந்து மாவட்ட செயலாளர் ஒழிக, எம்எல்ஏ வாழ்க என கோஷங்கள் எழுப்பியபடி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

The post பெண் மாவட்ட செயலாளர் என்னை அசிங்கப்படுத்துகிறார்: நொந்து நூடூல்ஸான அதிமுக எம்எல்ஏ appeared first on Dinakaran.

Related Stories: