வெச்சு செய்த வேலுமணி வெறும் 3% வாக்கு வங்கி உள்ள பாஜவில் நான் சேர்வேனா?

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மறைந்த சிங்கை கோவிந்தராஜ் 25-ம் ஆண்டு நினைவுதினம் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் சாய் விவாஹா ஹாலில் நேற்று நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
சமீப நாட்களாக யூ டியூப் சமூக வலைதளங்களில் நம் கட்சியை பற்றியும், என்னைப்பற்றியும் பல்வேறு தவறான தகவல் வெளிவருகிறது. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. நீங்களும் அதை பார்க்க வேண்டாம். அதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். அந்த யூ டியூப் தகவலை பார்த்து, கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கோப்பட்டார் என்றும் சொன்னார்கள். அதனால்தான் சொல்கிறேன், அதைப்பற்றியெல்லாம் நம் கட்சியினர் யாரும் பேச வேண்டாம், பார்க்க வேண்டாம். அதை பார்த்தால், நமது நேரம் வீணாகும். நம்மை யாரும், இந்த கட்சியை விட்டு பிரிக்கமுடியாது. எனது உடலில் அதிமுக ரத்தம் ஓடுகிறது. அதிமுக என்பது எனது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டிற்குத்தான் வருவார்கள். அதைவிட்டு யாரும் வெளியே போக மாட்டார்கள். அதிமுக, சாதாரண கட்சி அல்ல. உலகிலேயே 7-வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது.

தமிழ்நாட்டில், பாரதிய ஜனதாவுக்கு வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்கு வங்கி மட்டுமே உள்ளது. அந்த கட்சியில் போய் நான் சேரப்போகிறேன் என வதந்தி பரப்புகிறார்கள். இதற்கெல்லாம் நான் பதில் கூற வேண்டுமா? தமிழகத்தில் அதிமுகவுக்கு 35 முதல் 40 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. நாம், எப்போதும் நாமாகவே இருப்போம். அம்மன் அர்ஜூனன் போன்று, யாரும் கோபப்பட்ட பதில் கூற வேண்டாம். ‘‘டோன்ட் கேர்’’ என விட்டுவிடுங்கள். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

The post வெச்சு செய்த வேலுமணி வெறும் 3% வாக்கு வங்கி உள்ள பாஜவில் நான் சேர்வேனா? appeared first on Dinakaran.

Related Stories: