தேனி பங்களாமேட்டில் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஆணையம் அமைக்க கோரிக்கை

 

தேனி, பிப்.28: தேனி நகரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் மற்றும் கட்டிடம் சார்ந்த பல்வேறு சங்கங்கள் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி நகர் பங்களாமேட்டில், நேற்று அகில இந்திய கட்டுனர் சங்கம், தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம், தேனி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் சங்கம், கட்டிட பொறியாளர்கள் நலச்சங்கம் , நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம், தமிழ் மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்கம் ,மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேனி நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நவ்ஷாத், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜ் , முன்னாள் மாநில தலைவர் ஜெகநாதன் தேனி மாவட்ட பட்டய தலைவர் ஷர்வேஸ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டிடப் பணிக்கு தேவையான எம்சாண்ட், பி சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையானது, கடந்த ஆண்டுகளில் 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளதால் தமிழக அரசு ஒருங்கிணைந்த ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கட்டுமான பொறியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமானம் தொடர்பான பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

The post தேனி பங்களாமேட்டில் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஆணையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: