தார்நாடு மந்து பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்க மக்கள் கோரிக்கை

 

ஊட்டி, பிப்.28: கிளன்மார்கன் தார்நாடுமந்து, அர்தாலிமந்து பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். சோலூர் பேரூராட்சி செயலாளர் சின்முவ்குட்டன் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஊட்டி அருகேயுள்ள கிளன்மார்கன் பகுதியில் தார்நாடுமந்து மற்றும் அர்தாலி மந்து உள்ளது. இங்கு 20-க்கும் மேறண்பட்ட தோடர் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், இப்பகுதிகளுக்கு கடந்த பல நாட்களாக முறையாக குடிநீர் வருவதில்லை. இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வனங்களை ஒட்டியுள்ள கிராமம் என்பதால், வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, குடிநீருக்காக அருகில் உள்ள நீருற்றுகளுக்கு செல்லும் போது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த கிராமங்களுக்கு செல்லும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்களை அமைத்து இவ்விரு கிராமங்களுக்கும் முறையாக தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சின்முவ்குட்டன் மனுவில் கூறியுள்ளார்.

The post தார்நாடு மந்து பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: