பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங். மாவட்ட தலைவர் பேட்டி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பழவேலி தனியார் உணவகத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூரத்தி கலந்துக்கொண்டார். பின்னர், சுந்தரமூர்த்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 3ம் தேதி அன்று கடலுக்கு சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்து படகுகளில் இருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம் 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி தீரப்பு வழங்கியுள்ளது. இதனால், இராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பத்து ஆண்டுகால பாஜ ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் அடக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் 400 படகுகள், 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாளை (இன்று) துத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியில் செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், முன்னான் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மறைமலைநகர் நகர தலைவர் தனசேகர், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணை தலைவர் வெங்கடபெருமாள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.

The post பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங். மாவட்ட தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: