கும்மிடிப்பூண்டி அருகே திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த சோழவரம் ஒன்றியம், ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றியச் செயலாளர் செல்வசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ சிவாஜி, மாநில நிர்வாகிகள் பாஸ்கரன், சுந்தரம், அன்புவாணன், ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, பகலவன், ரவி, ரமேஷ், கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுகுழு உறுப்பினர்கள் குணசேகரன், வெங்கடாசலபதி, ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், ஆனந்தகுமார், பரிமளம், பூண்டி டி.கே. சந்திரசேகர், சக்திவேல், சுகுமாறன், ரமேஷ் ராஜ், ஜெகதீஷ், ஜான், பேரூர் செயலாளர் அறிவழகன், முத்து, அபிராமி, தமிழ், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் அரசகுமார் சிறப்புரையாற்றினார்.

இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசுகையில், கும்மிடிப்பூண்டி – பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 641 வாக்கு சாவடிகளில் திமுக தொண்டர்கள் வீடுவீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். திமுக கொண்டு வந்த சாதனைகள் விளக்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அனைத்து பகுதிகளிலும் கொண்டாட வேண்டும் என்றார். இதில் ஒன்றிய நகர, பேரூர் கிளைச் செயலாளர், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: