மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது ஒன்றிய அரசு: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாடல்

திருவள்ளூர்: மீனவர்கள் வாழ்வாதாரத்தை ஒன்றிய அரசு கெடுக்கிறது என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாடியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜவினரின் அராஜகம் குறித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ஆர்.எம்.தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 4 மாதமாக தினக்கூலி வழங்காமல், தமிழக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுக்கு தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜவினர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் படகை உடைத்து நாசப்படுத்தி பல லட்ச ரூபாய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் எம்பி கே.ஜெயக்குமார் தொகுதி முழுவதும் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த தேர்தலில் 3.50 லட்சத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கீடு செய்தால் அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் என்றார். பேட்டியின்போது, மாவட்ட நிர்வாகிகள் சதாபாஸ்கரன், கிளாம்பாக்கம் சிவக்குமார், வேப்பம்பட்டு அன்பழகன், குமார், தீபன் லாரன்ஸ், வட்டாரத் தலைவர்கள் பொன்ராஜ், தேவேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது ஒன்றிய அரசு: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: