சர்வதேச டி20ல் அதிவேக சதம்: நிகோல் லாப்டி உலக சாதனை

சர்வதேச டி20ல் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனை நமீபியாவின் நிகோல் லாப்டி-ஈட்டன் வசமாகி உள்ளது. நேபாளத்தில் நடக்கும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் நமீபியா – நேபாளம் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. மலான் க்ரூகர் 59, நிகோல் லாப்டி 101 ரன் (36 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய நேபாளம் 18.5 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

நிகோல் லாப்டி 33 பந்தில் சதம் அடித்தது, 2021 ஹாங்ஸோ ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாளத்தின் குஷால் மல்லா 34 பந்தில் சதம் விளாசி படைத்த சாதனையை தகர்த்தது. நேபாளம் 20 ஓவரில் 3 விக்கெடுக்கு 314 ரன் குவித்த அந்த போட்டியில் திபேந்ரா சிங் அய்ரீ 9 பந்தில் அரை சதம் அடித்ததும் உலக சாதனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. டேவிட் மில்லர், ரோகித் ஷர்மா, சுதேஷ் விக்ரமசேகரா தலா 35 பந்துகளில் சதம் விளாசி 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

The post சர்வதேச டி20ல் அதிவேக சதம்: நிகோல் லாப்டி உலக சாதனை appeared first on Dinakaran.

Related Stories: