பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை ஆட்சியர் அலுவலகம் நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அக்கட்சி சார்ப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை,

எம்.எல்.ஏ., தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., சு. திருநாவுக்கரசர், எம்.பி., எம். கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நாளை (28.2.2024) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.சி., எம்.எஸ். திரவியம், எம்.சி., ஜெ. டில்லிபாபு, எம்.சி., எம்.பி. ரஞ்சன்குமார், எம்.ஏ. முத்தழகன், அடையாறு த. துரை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை ஆட்சியர் அலுவலகம் நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: