வேலூரில் பரிதாபம்டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பஸ்சில் சிக்கி பலி

வேலூர் : உறவினருடன் டூவீலரில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பஸ்சின் அடியில் சிக்கி பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ராஜகுமாரி(65). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தனது உறவினர் மணிவாசகம் என்பவருடன் டூவீலரில் வந்தார். நேற்று மதியம் நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் சீக்கராஜபுரத்துக்கு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

கிரீன் சர்க்கிளில் சிக்னல் பகுதியில் திரும்பிய போது பின்னால் வந்த அரசு பஸ் டூவீலரில் உரசியது. இதில் நிலை தடுமாறிய ராஜகுமாரி, தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்சக்கரம் அவரது தலையின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜகுமாரி பரிதாபமாக இறந்தார். மணிவாசகம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலூரில் பரிதாபம்டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பஸ்சில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: