இன்று மதியம் 2.15 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர்: அம்மன் அர்ஜுனன் பரபரப்பு பேட்டி

சென்னை: இன்று மதியம் 2.15 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர் என அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி முக்கிய புள்ளி, பா.ஜ.க.வில் இணைவதாக நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் பாஜகவில் ஒருவரும் இணையாத நிலையில் அக்கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் சேருவதாக அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன்; இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சேலத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளனர்.

பாஜகவில் பேர் சொல்லும்படி யார் இருக்கிறார்கள்; அந்தக் கட்சியில் நாங்கள் ஏன் இணையப் போகிறோம்? நான் அதிமுகவின் ராஜாவாக உள்ளேன்; நான் எதற்காக பாஜகவில் சேர்ந்து கூஜா தூக்கப் போகிறேன்?. கொங்கு மண்டலத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். பாஜகவுக்கு தில் இருந்தால், போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும்; பாஜக வெல்வதற்கு இது ஒன்றும் வட மாநிலம் அல்ல; தமிழ்நாடு. அதிமுக ஆதரவில் சட்டமன்ற உறுப்பினர்களானவர்கள் பாஜகவினர்.

மராட்டியத்தைப் போல தமிழ்நாட்டில், அதிமுகவில் ஏக்நாத் ஷிண்டேவை பாஜகவால் உருவாக்க முடியாது. அதிமுகவில் தொண்டர்களைக் கூட பாஜகவால் இழுக்க முடியாது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் நாங்கள் ( அதிமுக) உருவாக்கினோம். இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் தனித்து நின்ற சரித்திரமில்லை அதிமுக தான் 2016ல் தனித்து நின்று 37 தொகுதிகளில் வென்றோம் இவ்வாறு கூறினார்.

The post இன்று மதியம் 2.15 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர்: அம்மன் அர்ஜுனன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: