பெரம்பலூரில் மக்கள் குறைதீர் நாள்கூட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 3வது நாளாக பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர்,பிப்.27: கடந்த 3ம்தேதி பெரம்பலூரில் நடைபெற்ற, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டத் தில், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 10அம்சக் கோரிக் கைகளைவலியுறுத்தி, பிப்- 22,23, 26 தேதிகளில் பணி புறக்கணிப்பு மற்றும் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது, 27ம்தேதி முதல் தொடர் வேலைநிறு த்தப் போராட்டத்தில் ஈடுப டுவது என முடிவு செய்யப் பட்டது.

அதன்படி தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 22,23 ஆகியதேதிகளில் அலுவல கத்திற்கு வந்து கையெழுத் திட்டு, பின்னர் பணிகளை புறக்கணித்துவிட்டு, காத்தி ருப்பு,போராட்டத்தில் ஈடு பட்டனர். அதேபோல் மூன்றாவது நாளான நேற்று (26ம் தேதி)காலை 11 மணி யளவில் பெரம்பலூர் தாலுகா அலுவலக வாசலில் தமிழ்நாடுவருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவ ட்ட பொருளாளர் குமரி ஆனந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் பணி களை புறக்கணித்துவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட தலை வர் பாரதி வளவன் தலை மையில், பணிகளை புறக் கணித்துவிட்டு மாலை 5 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டர். சட்ட ஆலோசகர் சிவா, வரு வாய்கோட்டாட்சியரின் நேர் முக உதவியாளர் கிருஷ்ண ராஜ்,மாவட்டப்பொருளாளர் குமரி ஆனந்தன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கல ந்து கொண்ட இந்த காத்தி ருப்பு போராட்டத்தில் தமிழ் நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் மாநில பொருளாளர் சோமு என் கிற சோமசுந்தரம் கலந்து கொண்டு, தமிழகம் முழுவ தும் நடைபெற்று வரும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் போராட்ட நிலைகள் குறித்து விளக் கிப் பேசினார்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம், வரு வாய் கோட்டாட்சியர் அலு வலகம், பெரம்பலூர் தாலு க்கா அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், அரசுகேபிள் டிவி பிரிவு, வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் தாலு க்கா அலுவலகங்களிலும், மாவட்ட நிலம் எடுப்புப் பிரிவு உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான 140பேர் ஈடு பட்டனர். இதனால் அனைத்து வகை ச் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் உள்ளிட்ட வரு வாய்த் துறையினர் சம்பந் தப்பட்ட அனைத்துப் பணி களும் முடங்கிப் போயிருந் தன.

The post பெரம்பலூரில் மக்கள் குறைதீர் நாள்கூட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 3வது நாளாக பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: