கால தாமதம் செய்யாமல் பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு

 

ஊட்டி, பிப்.27: கோத்தகிரி அருகே பூபதியூர் பகுதிக்கு காலம் தாழ்த்தாமல் பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். கோத்தகிரி அருகே நியாங், பூபதியூர் ஊர் தலைவர் மாகாளி மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஜக்கனாரை 1-வது வார்டுக்கு உட்பட்ட பூபதியூர் என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம்.

நாங்கள் பயன்படுத்தி வந்த பொது மற்றும் சுடுகாட்டு பாதை தடை செய்ததை அடுத்து பலவித போராட்டங்கள் மேற்கொண்டு முடிவில் டிஆர்ஒ., ஆர்டிஒ., மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் உள்ளிட்டோர் நேரில் கள ஆய்வு செய்தும், விசாரணை செய்தும், நில எடுப்பு செய்து பாதை அமைத்து தருவதாக உறுதியளித்து அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் ஆதிதிராவிடர் நல அலுவலர் பணி மாறுதலாகி சென்று விட்டதால் பாதை அமைத்து தரும் பணி நின்று விட்டது. தற்போது அதன் தொடர்ச்சியான பணிகளை மேற்கொள்வதை தவிர்த்து விட்டு மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரணை, ஆய்வு என அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவது பொதுமக்களுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை ஆய்வு செய்து உடனே பாதை அமைத்து தர நடவடிககை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post கால தாமதம் செய்யாமல் பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: