சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று மாலை முடிவு.. ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்படாததை கண்டித்து நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரில் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் உத்தரவு பிறப்பித்து இரண்டு வாரமாகியும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவரை பணியிடை நீக்கம் செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இன்னும் 3 நாட்களில் தங்கவேல் பணியில் இருந்து ஓய்வுபெறவுள்ளதால் இந்த விவகாரத்தில் சிறப்பு ஆணை வெளியிடவேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே மருத்துவ விடுப்பு முடிந்து இன்று பணிக்கு திரும்பிய தங்கவேல் கணினி அறிவியல் துறை தலைவராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் அரசின் உத்தரவுப்படி தங்கவேல் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

 

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று மாலை முடிவு.. ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: