தென் மாவட்ட மழை பாதிப்பு ஏக்கருக்கு ரூ,40,000 இழப்பீடு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ,40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் மாவட்ட கனமழை பாதிப்பில், மொத்தம் 4 லட்சத்து 12,165 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ,160.42 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ,40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சம்பா பருவத்தில் வறட்சியால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ,40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ,40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ,25,000 வீதமும் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தென் மாவட்ட மழை பாதிப்பு ஏக்கருக்கு ரூ,40,000 இழப்பீடு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: