நாமக்கல்லில் மீண்டும் போட்டி: தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று பல்முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்தானது. கடந்த முறை திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்றது.

கடந்த முறை போட்டியிட்டு வென்ற நாமக்கல் தொகுதியிலேயே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலைப் போலவே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.

 

The post நாமக்கல்லில் மீண்டும் போட்டி: தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: