கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

மேலூர், பிப். 24: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சமூகத் தணிக்கை கிராம சபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் நேற்று 2022-23ம் ஆண்டிற்கான சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் எட்டிமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கஜம் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வண்ணன், ஊராட்சி செயலர் பிரபு, பணித்தள பொறுப்பாளர்கள் கயல்விழி, லட்சுமி, வட்டார வள அலுவலர் வாசுகி உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.இதே போல் கம்பூர் ஊராட்சி மந்தையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். துணை தலைவர் நிலா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், கிராம மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராம சபைக்கு மூத்த கிராம சபை உறுப்பினர் தலைவராக தேர்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதிப்படி, தேனங்குடிப்பட்டியை சேர்ந்த அழகன் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

The post கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: