திருவெறும்பூர் அருகே காட்டூரில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம்

திருவெறும்பூர், பிப்.24: தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று காட்டூரில் நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய, சுகாதார, செவிலியர்கள், கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் காட்டூரில் நடந்தது. மாவட்ட தலைவர் காயத்ரி தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, செல்வராணி, அனுராதா, ராணி, மாலதி, சந்தோஷ் மேரி, அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பிருந்தா ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக செயல் தலைவர் கோமதி, மாநிலத் துணைத் தலைவர் விமலாதேவி ஆகியோர் கலந்து கொண்டு செவிலியர்களுக்கான உரிமைகள் என்னென்ன, செவிலியர்களின் பணி பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாவட்ட தலைவர் காயத்ரிதேவி கூறுகையில், தாய்சேய் நலமுடன் இருப்பதற்காக செவிலியர்கள் பல்வேறு பணி சுமைகளை செய்து வருகிறோம். மேலும் ஆண், பெண் இருவருக்கும் ஒரே தகுதி இருந்தும் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது, அதிக பணிச்சுமையை சுமத்துவது ஆன்லைன் பதிவில் கால தாமதம் ஏற்படுவதால் மன உளைச்சல் உண்டாகிறது. இதனை அரசு கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சரி செய்து கொடுக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய, சுகாதார, செவிலியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சாந்தி வரவேற்றார்.

The post திருவெறும்பூர் அருகே காட்டூரில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: