திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் காணொலி வாகன பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூரில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் காணொலி வாகன பிரசாரம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாநில அரசின் சாதனைகளை வாகனத்தில் காணொலி மூலம் விளக்கும் பிரசாரம், ஆலந்தூர் கடும்பாடி அம்மன் கோயில்தெரு, மண்டி தெரு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த பிரசாரத்தின் போது தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மகளிருக்கான திட்டங்கள் போன்றவை காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பார்த்தனர். இந்த பிரசாரத்தில், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் குணாளன், வட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பூபாலன், இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பிரவீன்குமார், நிர்வாகிகள் சீனிவாசன், கார்த்திக், ராஜா, சகீம்ஷா, குமார், வாசீம், தீனன், பாலாஜி, பால அமுதநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் காணொலி வாகன பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: