குன்னம் அத்தியூர் கிராமத்தில் மூப்பனார் கோயில் கும்பாபிஷேகம்

 

குன்னம், பிப்.23: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் மூப்பனார், மதுரை வீரன் வெள்ளையம்மாள் பொம்மி அம்மாள் அதன் பரிவார சுவாமி புனராவர்த்தன அதிர்ஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 19ம் தேதி காப்பு கட்டப்பட்டு 21ம் தேதி புதன் கிழமை மாலை 5 மணி வின்னேஸ்வர பூஜை புண்ணியாவாசனம் பஞ்ஜகவ்யம் வாஸ்து சாந்தி மகா தீபாராதனை மாலை 6 மணிக்கு மூப்பனார் சக்தி அழைத்து இரவு 7 மணிக்கு கும்ப ஸ்தாபனம் கலாகர்ஷணம் முதல் கால யாக பூஜை திரவியாஹீதி மகா பூர்ணாஹீதி தீபாரணையின் நடைபெற்றது.

இரவு 8.30 மணிக்கு யாந்திரஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் 22ம் தேதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை மூல மூலமாந்த்ர காய்த்ரி ஜப பாராயணம் இரண்டாம் கால யாக பூஜை 108 திரவியாஹூதி, நாடி சந்தனம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 7:30 மணிக்கு மேல் கடம்ப புறப்பாடும் மற்றும் 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதணை நடைபெற்றது.

The post குன்னம் அத்தியூர் கிராமத்தில் மூப்பனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: