தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகைக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் வாழ்த்து

விளாத்திகுளம்,பிப்.23: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற செல்வபெருந்தகை எம்எல்ஏவை மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட செல்வ பெருந்தகை எம்எல்ஏ கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பொறுப்பேற்றார். இதையடுத்து அவரை சட்டமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

The post தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகைக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: