காங். வங்கி கணக்கில் இருந்து ரூ.65 கோடியை எடுத்தது வருமான வரித்துறை: ஜனநாயக விரோதம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.65 கோடியை வருமான வரித்துறை ஜனநாயக விரோதமாக எடுத்துள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் அஜய் மாக்கன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அஜய் மாக்கன் நேற்று கூறுகையில்,‘‘ விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் தடையின்றி நடந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரசின் வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருந்து, ரூ.65 கோடியை வருமான வரித்துறை எடுத்துள்ளது. முந்தைய ஆண்டுகளின் வரி கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக ரூ.210 கோடி அபராதம் விதித்ததற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்த போதும் வருமான வரிதுறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள போது கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பது ஜனநாயக விரோதமாகும்’’ என்றார்.

The post காங். வங்கி கணக்கில் இருந்து ரூ.65 கோடியை எடுத்தது வருமான வரித்துறை: ஜனநாயக விரோதம் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: