ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் சிஏபிஎப், அசாம் ரைபிளில் 24,000 மாற்றுப்பணியிடம்

புதுடெல்லி: மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎப்) மற்றும் அசாம் ரைபிளில் தற்போதுள்ள ஆள்பலத்தில் 24 ஆயிரம் மாற்றுப்பணியிடங்களை உருவாக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய ஆயுத போலீஸ் படையில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எஸ்எஸ்பி ஆகிய 5 படைப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இப்படையினர் நாடு முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், எல்லை பாதுகாப்பு, தேர்தல் பாதுகாப்பு பணி, சட்டம் ஒழுங்கை பராமரித்தல் போன்ற பல்வேறு உள்நாட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படைப்பிரிவுகள் மற்றும் அசாம் ரைபிள் படையில் தற்போது ஆள்பலத்தில் 24 ஆயிரம் மாற்றுப்பணியிடங்களை உருவாக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இப்படைகளில் இருக்கும் 24 ஆயிரம் பணியாளர்கள் மாற்று பணிகளுக்கு அனுப்பப்படுவார்கள். தேவைப்படும் சமயத்தில் வேண்டிய இடங்களில் இவர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுகின்றனர்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் சிஏபிஎப், அசாம் ரைபிளில் 24,000 மாற்றுப்பணியிடம் appeared first on Dinakaran.

Related Stories: