மூவராயன்பாளையம் செல்ல தார்சாலை அமைக்க வேண்டும்

சமயபுரம், பிப்.21: திருப்பைஞ்ஞீலி அடுத்துள்ள மூவராயன்பாளையம் மேலூர் பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி பக்கமுள்ள மூவராயன்பாளையம் மேலூர் பகுதியில் உள்ள குக்கிராமாமன சுப்பிரமணியபுரத்திற்கு முறையான சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தார்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தற்போது அரைகுறை கல், மண் திட்டு சாலையாக மாறிவிட்டது. மேலும் தற்போது இந்த சாலையில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்காரர்கள் கூட சிரமப்பட்டு தாமதமாகவும் வருவதாக கூறுகின்றனர். இதையடுத்து இந்த கிராமத்தில் சுமார் 120 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இப்பகுதிகளில் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பள்ளி மாணவர்கள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகி கடந்து செல்ல வேண்டி இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி முதியோர், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இப்பகுதியில் உடனே தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மூவராயன்பாளையம் செல்ல தார்சாலை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: