சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.83 லட்சத்தில் விளையாட்டு திடல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, ஜாபர்கான்பேட்டை, ராகவன் காலனி, 2வது லிங் தெருவில் ரூ.83லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், ரூ.83 லட்சம் மதிப்பில் ராகவன் காலனியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலில் கூடைப்பந்து மைதானம், இறகுப்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், நவீன நடைபாதை, குடிநீர் வசதி, மின் வசதி, காவலர் அறை, சுற்றுச்சுவர், நவீன கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.83 லட்சத்தில் விளையாட்டு திடல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: