கிழக்கு தாம்பரம் சேலையூரில் பேக்கரி கடையில் தீ விபத்து

தாம்பரம் : தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூரில் பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாம்பரம் அடுத்த சேலையூர் அரசு பள்ளி எதிரே பேக்கரி மற்றும் உணவுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த பேக்கிரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.

இதனையடுத்து அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவியதால் வரிசையாக உள்ள அணைத்து கடைகளிலும் எரிந்து சேதமானது. இதனால் கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, மேடவாக்கம், பிரதான சாலைகளில் இந்த தீ விபத்தால் போக்குவரத்து முடங்கியது. தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

காற்றின் வேகத்தால் தீயானது கொழுந்து விட்டு எரிவதால் அந்த இடத்தை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடுத்தடுத்து கடைகளில் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

The post கிழக்கு தாம்பரம் சேலையூரில் பேக்கரி கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: