முதியோர்கள் நலனுக்கு வரி சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்பு திட்டம் அவசியம்: நிதி ஆயோக் வலியுறுத்தல்

புதுடெல்லி: முதியோர்களின் நலனுக்காக வரி சீர்திருத்தங்கள்,கட்டாய சேமிப்பு திட்டம், வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசை நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு தொடர்பான சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் நிதி ஆயோக் அறிக்கை தயாரித்துள்ளது. அதில்,மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள தேசிய இணைய தளம் தொடங்க வேண்டும். இந்தியாவில் சமூக பாதுகாப்புக் கட்டமைப்பு குறைவாக இருப்பதால், பெரும்பாலான முதியவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து கிடைக்கும் வருமானத்தையே நம்பியிருக்கிறார்கள்.

மாறுபடும் வட்டி விகிதங்கள் அவர்களின் வருமானத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் வாழும் நிலைகளுக்குக் கீழேயும் கூட சென்று விடுகிறது.எனவே, மூத்த குடிமக்கள் வைப்புத்தொகையின் மீதான வட்டிக்கு சாத்தியமான அடிப்படை விகிதத்தை அமைக்க ஒரு ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. அவர்களுக்கு கட்டாய சேமிப்பு திட்டம், வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் முதியோர்கள் தற்போது மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இது சுமார் 10.4 கோடியாகும். வரும் 2050 ம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் அவர்கள் 19.5 சதவீதம் இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.

The post முதியோர்கள் நலனுக்கு வரி சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்பு திட்டம் அவசியம்: நிதி ஆயோக் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: