திருவேற்காடு, எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் வணிகச்சந்தை

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தொழில் முனைவோர் வணிகச் சந்தை – 2024’ நடைபெற்றது. தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னோவேஷன் கவுன்சில் இணைந்து 100 கண்காட்சி அரங்குள் அமைக்கப்பட்டன. கல்லூரித் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்தார்.  கல்லூரி இயக்குனர் சாய் சத்யவதி முன்னிலை வகித்தார்.

முதல்வர் மாலதி செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். தொழில்துறையின் பிரபலங்கள் தேஜு அஷ்வினி, வி.ஜே.சுரேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் சுமார் 4 ஆயிரம் பங்கேற்பாளர்களுடன் கல்வி மற்றும் தொழில்முனைவோரின் ஒருங்கிணைப்பை உணர்த்தும் விதமாக அமைந்தது, இது படைப்பாற்றல் மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வால் மாணவர்களின் ஒளிரும் எதிர்காலத்தைக் காட்டுவதாய் அமைந்தது.

The post திருவேற்காடு, எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் வணிகச்சந்தை appeared first on Dinakaran.

Related Stories: