தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் மாசித் திருவிழா.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5ம் நாள் குடைவரை வாயில் தீபாராதனை வழிபாடு!!

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் மாசித் திருவிழா கலைக்கட்டியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவின் 5ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான், அம்பாள், சுவாமி ஜெயந்தி நாதர் ஆகிய 3 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று குடைவரை வாயில் தீபாராதனை என அழைக்கப்படும் இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கீரம்பூரில் பிரசித்தி பெற்ற 8கை அம்மன் குடமுழுக்கு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்தனர்.

திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர தெப்பல் உற்சவத்தில் இரண்டாம் நாளில் ருக்மணி, சத்தியபாமா, பார்த்த சாரதி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக கோயிலில் காலை முதல் பிற்பகல் வரை பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் போன்றவை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 3ம் நாளான இன்று மாலை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தெப்பல் ஊர்வலம் நடைபெற உள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் மாசித் திருவிழா.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5ம் நாள் குடைவரை வாயில் தீபாராதனை வழிபாடு!! appeared first on Dinakaran.

Related Stories: