மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மிசோரம் முதல்வர் எதிர்ப்பு

அய்ஸால்: மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்போவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்த நிலையில் மிசோரத்தில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஸோரம் மக்கள் இயக்கத்தின் (இசட்பிஎம்) தலைவரும் முதல்வருமான லால்டுஹோமா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ மிசோ மக்களை பிரிக்கும் திட்டத்துடன் பிரிட்டிஷார் இந்த எல்லையை வகுத்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு முறை சந்தித்து மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வது குறித்து எடுத்து கூறினேன். மணிப்பூர் மாநில பகுதியில் உள்ள மியான்மர் எல்லை பகுதியில் வேலி அமைத்தாலும் மிசோரம் பகுதியில் வேலி அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினேன். எனவே, மிசோரம்-மியான்மர் இடையேயான 510 கிமீ தூர எல்லையில் அரசு வேலி அமைக்காது என நம்புகிறேன்’’ என்றார்.

The post மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மிசோரம் முதல்வர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: