வீண் தகராறு செய்து ஏசி மெக்கானிக்கை வெட்டி கொலை செய்தவர் மீது குண்டாஸ்

திருச்சி: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்போில் திருச்சி மாநகாில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மற்றும் சரக உதவி கமிஷனர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். கடந்த டிச.31ம் தேதி பொன்மலை மஞ்சதிடல் ரயில்வே நிலையம் அருகில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின் போில் பொன்மலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் இறந்தவர் கோயம்புத்தூரில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருவதாகவும், அவரை வீண் தகராறு செய்து வெட்டி கொலை செய்ததாக, மேலகல்கண்டார்கோட்டையை சோ்ந்த சதீஷ்(23) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post வீண் தகராறு செய்து ஏசி மெக்கானிக்கை வெட்டி கொலை செய்தவர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: