பெரம்பலூரில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு வசதி கடன் முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் வெங்கடேசபுரம் மற்றும் அரியலூர் பொன்னுசாமி அரண்மனைத் தெருவில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் நேற்று (16ம் தேதி) மற்றும் மற்றும் இன்று (17-ம் தேதி) 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டு வசதி கடன் முகாம் கிளை மேலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் வீட்டு கடன் திட்டங்களான வீட்டுமனை, வீடு, அடுக்குமாடி வாங்க, வீடு வணிக வளாகம் கட்ட, வீடு பழுது பார்க்க, விஸ்தரிக்க, அடமானக்கடன் வாங்க, பிற நிறுவனங்களில் கூடுதல் வட்டியில் உள்ள வீட்டுகடன்களை மாற்றி குறைந்த வட்டியில் கூடுதல் தொகை பெறுவதற்கு கடன்கள் வழங்கப்படுகிறது .மேலும் நேற்று சுமார் ஒன்றரை கோடி அளவில் முன் அனுமதிக் கடன் வழங்கப்பட்டது. மேலும் செல்வி என்பவர் சுமார் ரூ.45 லட்சம் அளவில் வீட்டு வசதி கடன் பெற்றார். இன்றும் வீட்டு வசதி கடன் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள கலந்து கொண்டு வீட்டு வசதி கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.

The post பெரம்பலூரில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு வசதி கடன் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: