கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் மின்னணுவியல் பயிற்சி பட்டறை

கோவில்பட்டி, பிப்.17: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக்கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் மின்னணுவியல் துறை சார்பில் \”சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவுதல், செயல்பாடு மற்றும் பராமரித்தல்\” என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிற்சி பட்டறை நடைபெற்றது. மதுரையைச்சேர்ந்த அகரம் பவர் சொலுஷனின் மேலாண்மை இயக்குனர் சுல்தான் அலாவுதீன் மற்றும் அவரது குழுவினர் பயிற்சி பட்டறை நடத்தினர். முன்னதாக மின்னணுவியல் துறைத்தலைவர் சங்கர்கணேஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி தலைமையுரையாற்றினார். சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் வெங்கடாசலபதி வாழ்த்துரையாற்றினார். பயிற்சிப்பட்டறையில் மரபுசாரா மின்சாரத்தின் பயன்கள், சூரிய மின்சக்தி பயன்பாடு, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பும் பற்றி எடுத்துரைத்தனர். மாநில அளவில் 10க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 150க்கும் மேலான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாட்டினை கல்லூரி செயலர், முதல்வர் மற்றும் இயக்குனர் மேற்பார்வையில் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

The post கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் மின்னணுவியல் பயிற்சி பட்டறை appeared first on Dinakaran.

Related Stories: