ஜனநாயகத்தையும் சம நிலையையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது: தேர்தல் பத்திரம் ரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பாத்திரங்களை ரத்து செய்ததற்கு
தமிழக கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் ரத்து: முதலமைச்சர் வரவேற்பு

தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றமே சரியாக கூறியுள்ளது. அனைத்துக் கட்சிகளின் ஜனநாயகத்தையும் சம நிலையையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது. தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும் இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

The post ஜனநாயகத்தையும் சம நிலையையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது: தேர்தல் பத்திரம் ரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: