கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று முதல் இலக்கியத் திருவிழா

மதுரை, பிப்.14: மதுரையில் உள்ள கலைஞர் நுற்றாண்டு நூலகத்தில் இன்றும் மற்றும் நாளையும் வைகை இலக்கியத் திருவிழா நடக்கிறது. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித் துறை பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த இரு நாட்கள் வைகை இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தின் பழமைக்கும், மரபுக்கும் முக்கியமான அடையாளமாக இருப்பது வைகையும், மதுரையும் ஆகும். மதுரையின் பழமைக்கும், மரபுக்கும் கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிப்.14, பிப்.15ம் தேதிகளில் நடைபெறும் வைகை இலக்கியத் திருவிழாவில் பேச்சரங்கம் மற்றும் கவியரங்கத்தில் மாணவ,மாணவிகளுக்கு உரையாடல், வினாடி வினா, விவாத மேடை மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

வைகை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கலந்து கொண்டு 40க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறவுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் வைகை இலக்கியத் திருவிழா-2024 நிகழ்ச்சியினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று முதல் இலக்கியத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: