சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத், முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது X தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார். அதில்; விதி எண். 220ன் படி நேற்று (12.02.2024) ஆளுநர் உரையின் போது சட்டப்பேரவையில் ஆளுநரின் பேச்சு குறித்து அவை நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக ஊடகமான X தளத்தில் வெளியிட்ட ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: